Tuesday, May 17, 2016

How To Use Onion Juice For Hair Regrowth?

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெங்காயத்தைப் பயன்படுத்துவது எப்படி?

வெங்காய தண்ணீர்
ஒரு பாத்திரத்தில் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். வெங்காயம் மென்மையானதும், நீரை வடிகட்டி, அந்த நீரைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து ஒரு மணிநேரம் கழித்து, ஷாம்பு போட்டு தலைமுடியை அலச வேண்டும். இதனால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

தேங்காய் எண்ணெய்
சுத்தமான தேங்காய் எண்ணெய் தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும். அத்தகைய தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, வெங்காய சாற்றினை சிறிது சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பிறகு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

ரம் 
ஒரு சிறு பாத்திரத்தில் வெங்காய சாற்றினை ஊற்றி, மிதவான தீயில் சூடேற்றி, பின் அதில் 60 மி.லி ரம் உடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச, தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரும்.

தேன் 
1 கப் வெங்காய சாற்றில் தேன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து அலச, மயிர்கால்களின் வலிமை அதிகரிப்பதோடு, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்

ஆலிவ் ஆயில் 
ஆலிவ் ஆயிலை முதலில் தலையில் தடவி, பின் 15 நிமிடம் கழித்து வெங்காய சாற்றினைக் கொண்டு மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். இதனாலும் தலைமுடி நன்கு வளரும். 


No comments:

Post a Comment

நல்லமாடசாமி திருக்கோவில் - திருமலாபுரம் 2018

அருள்மிகு நண்டு என்கிற  நல்லமாடசாமி   கும்பாபிஷேகம் & கொடைவிழா   திருமலாபுரம் 2018