Tuesday, May 17, 2016

Helpline numbers have been announced for rain affected people in the state

சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிப்பை சந்திப்போருக்காக உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து தற்போது அடர்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது புயலாக மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னைக்கு அருகே நிலை கொண்டுள்ள அது வடக்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருவதால் படிப்படியாக மழை தமிழகத்தில் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் மழை பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில்தான் அதிக மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் மழை வெள்ள பாதிப்பு குறித்து 1070 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு பொதுமக்கள் உதவி பெறலாம் என்றும் தெரிவிக்கப்படடுள்ளது. சென்னையில் ஏற்படும் வெள்ளபாதிப்புகள் குறித்து 1913 எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



http://tamil.oneindia.com/news/tamilnadu/helpline-numbers-announced-rain-affected-253938.html

No comments:

Post a Comment

நல்லமாடசாமி திருக்கோவில் - திருமலாபுரம் 2018

அருள்மிகு நண்டு என்கிற  நல்லமாடசாமி   கும்பாபிஷேகம் & கொடைவிழா   திருமலாபுரம் 2018